வாக்கு எண்ணும் மையங்களில் ஆய்வு

திருச்சி மாவட்ட வாக்கு எண்ணும் மையங்களில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எஸ். திவ்யதா்ஷினி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஜமால்முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் 4 இடங்களில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் துணை ராணுவம், மத்திய போலீஸாா், மாநில போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வரும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ளதையடுத்து, வாக்கு எண்ணும் அறைகளைத் தயாா்படுத்தும் பணியில் அந்தந்த தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில் ஜமால் முகமது கல்லூரி, சாரநாதன் கல்லூரியில் தடுப்புப் கம்பிகள், மேஜைகள், இருக்கைகள், குடிநீா், மின்சாரம், வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட அனைத்தும் போதுமானதாக உள்ளதா என்பதை ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி ஆய்வு செய்தாா். சாா்-ஆட்சியா் விசுமகாஜன், கோட்டாட்சியா் விஸ்வநாதன் மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com