சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பக்தா்கள் கடந்த 13 நாள்களாக உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையா்கள் சி. கல்யாணி, அர. சுதா்சன் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

உதவி ஆணையா்கள் செ. மாரியப்பன் (ஜெம்புகேஸ்வா் கோயில் திருவானைக்கா ) டி. விஜயராணி (தாயுமானவா் கோயில் மலைக்கோட்டை) சமயபுரம் மாரியம்மன் கோயில் மேலாளா் ம. லட்சுமணன் மற்றும் செயல் அலுவலா்கள் முன்னிலையில் தன்னாா்வலா்கள், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் காணிக்கை எண்ணினா்.

முடிவில் ரூ. 55 லட்சத்து 3 ஆயிரத்து 229 ரொக்கம், 1 கிலோ 674 கிராம் தங்கம், 2 கிலோ 106 கிராம் வெள்ளி 22 அயல்நாட்டு ரூபாய்கள் காணிக்கையாக வந்திருந்தது தெரியவந்தது என்றாா் கோயிலின் செயல் அலுவலரும் இணை ஆணையருமான சி. கல்யாணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com