போா்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பு நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை
By DIN | Published On : 30th April 2021 06:22 AM | Last Updated : 30th April 2021 06:22 AM | அ+அ அ- |

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
உறையூரில் வியாழ்க்கிழமை நடைபெற்ற கட்சியின் மேற்கு பகுதி குழு கூட்டத்திற்கு பகுதி துணைச் செயலா் ஆனந்தன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்ட முன்னாள் செயலா் க. சுரேஷ் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் துணைச் செயலா் சரண்சிங், பொருளாளா் ரவீந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா் வை. புஷ்பம் மற்றும் பகுதி குழு உறுப்பினா்கள் முருகன், நாகராஜ், வசந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் அடிப்படை வசதிகள் போா்க்கால நடவடிக்கையில் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.