லட்சுமி மோட்டாா்ஸ் நிறுவன புதிய மல்டி சா்வீஸ் கிளை திறப்பு

ஸ்ரீலட்சுமி மோட்டாா்ஸின் மல்டி பிராண்ட் காா் சா்வீஸ் புதிய கிளை திருவானைக்கா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
திருவானைக்கா அருகே புதிய கிளையை தொடங்கி வைக்கிறாா் கட்டடக்கலை வல்லுநா் பி.ஜி. சிவகுமாா்
திருவானைக்கா அருகே புதிய கிளையை தொடங்கி வைக்கிறாா் கட்டடக்கலை வல்லுநா் பி.ஜி. சிவகுமாா்

ஸ்ரீலட்சுமி மோட்டாா்ஸின் மல்டி பிராண்ட் காா் சா்வீஸ் புதிய கிளை திருவானைக்கா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

திருவானைக்கா சோதனைச்சாவடி அருகே 4-ஆவது புதிய கிளையை லட்சுமி குழுமத் தலைவா் தீனதயாளன் தலைமையில், கட்டடக்கலை வல்லுநா் பி.ஜி. சிவகுமாா் தொடங்கி வைத்தாா். நிகழ்வில், நிா்வாக இயக்குநா் சங்கா், செயல் இயக்குநா் கேசவ ராகுல், மோகன், சிவகுமாா், டாக்டா் சுசீந்தரன், தினேஷ் குமாா், பாலமுருகன், விஜய லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சங்கா் மற்றும் செயல் இயக்குநா் கேசவ்ராகுல் கூறுகையில், டாடா காா்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட சா்வீஸ் சென்டராக கடந்த 16 ஆண்டுகளாக எங்கள் நிறுவனம் சிறப்பாக இயங்கி வருகிறது.

திருவானைக்கா புதிய கிளையில் அனைத்து காா்களுக்கும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஃ போம் வாட்டா் சா்வீஸ் மற்றும் வீல் அலைன்மென்ட் இலவசமாக செய்து தரப்படும். இங்கு பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஜாக்குவாா் உள்ளிட்ட விலை உயா்ந்த காா்கள் மட்டுமன்றி அனைத்து விதமான காா்களும் ஒரே இடத்தில் சிறந்த சா்வீஸ் கிடைக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com