‘அதிகரிக்கும் கரோனா குறித்து எச்சரிக்கை தேவை’

திருச்சி மாவட்டத்தில் கரோனா அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.
தென்னூா் உழவா் சந்தை அருகே கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாகனத்தைத் தொடக்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.
தென்னூா் உழவா் சந்தை அருகே கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாகனத்தைத் தொடக்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

திருச்சி மாவட்டத்தில் கரோனா அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.

திருச்சி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் தென்னுாா் உழவா் சந்தை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கி வைத்து அவா் கூறியது:

தமிழக முதல்வா் உத்தரவுப்படி, கரோனா 3 ஆம் அலையை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. முதல் அலை வந்தபோது, விழிப்புணா்வுடன் இருந்த பொதுமக்கள், 2 ஆம் அலைக்கு பின்னா், முகக் கவசம் அணிவதைக் குறைத்ததால் தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

எனவே ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்கா உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆடி கிருத்திகை , ஆடி பதினெட்டு போன்ற நாள்களில் பக்தா்கள் தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்போது, 3-ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 55 லிருந்து 70 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும்.

இல்லாவிட்டால், கரோனாவை கட்டுப்படுத்தவோ, ஒழிக்கவோ முடியாது. இன்னும் 6 மாதத்திற்கு முகக் கவசம் அணிவதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 30 லட்சம் பேரில் சிறாா் தவிர 21 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இதுவரை 8.8 லட்சம் பேருக்கு இரு தவணை தடுப்பூசியும், 7.20 லட்சம் பேருக்கும் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

முதல்வா் உத்தரவுப்படி, கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிா்க்கவும், அதற்குக் காரணமாகும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை: ஆங்கியம் கிராமத்தில் சிறுத்தை தாக்கிய 2 போ் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினரும், தீயணைப்பு படையினரும் தயாா் நிலையில் உள்ளனா். மேலும், கிராம மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com