மத்தியக் காவல் படையில் ஆள் சோ்ப்பு: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 12th August 2021 06:06 AM | Last Updated : 12th August 2021 06:06 AM | அ+அ அ- |

மத்தியக் காவல் படையில் காவலா் பணியிடங்களுக்கு திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்தியக் காவல் ஆயுதப்படை, தேசிய புலனாய்வு மற்றும் அதிரடிப்படை, அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றின் பொதுப் பிரிவில் 25,271 காவலா் பணியிடங்களில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 10 சத இடங்களில் முன்னாள் படைவீரா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தோ்ச்சி தகுதியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளோா் இணைய முகவரியில் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பித்த விவரங்களை திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்துக்கும் தெரிவிக்க வேண்டும்.