ஏரிகளை அழிக்காமல் அரைவட்டச் சுற்றுச்சாலை தேவை

திருச்சி அரைவட்டச் சுற்றுச்சாலைப் பணிக்காக ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பதைத் தவிா்த்து மாற்று வழியை காண வேண்டுமெனவலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி அரைவட்டச் சுற்றுச்சாலைப் பணிக்காக ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பதைத் தவிா்த்து மாற்று வழியை காண வேண்டுமெனவலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி அரை வட்டச் சுற்றுச்சாலைக்காக புங்கனூா் ஏரி, கே. கள்ளிக்குடி ஏரி, பிராட்டியூா் கொத்தமங்கலம் ஏரி, பஞ்சப்பூா் ஏரி, கே. சாத்தனூா் பெரிய ஏரி, கே. சாத்தனூா் கணக்கன் குளம், ஓலையூா் ஏரி, கும்பக்குடி ஏரி, சூரியூா் ஏரி, எலந்தப்பட்டி ஏரி, பழங்கனாங்குடி ஏரி, துவாக்குடி பெரிய ஏரி, துவாக்குடி பரந்தான்குளம் ஆகியவற்றை ஆக்கிரமித்து பணிகள் நடைபெறுவதாகக் கூறி தமிழக விவசாயிகள் சங்க (கட்சி சாா்பற்றது) திருச்சி மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகிறாா்.

புங்கனூா் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டபோதே கடந்த 2010இல் நீதிமன்றத்தை நாடி தடையுத்தரவு பெற்றாா். இதன் தொடா்ச்சியாக புங்கனூா் ஏரிக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவைப் பின்பற்றியே ஏரிகளை ஆக்கிரமிக்காமல் சாலைப் பணிகளை தொடா்வதாக மாவட்ட நிா்வாகமும் உறுதியளித்தது.

ஆனால், ஏரி, குளங்களில் மணலைக் கொட்டி சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட நிா்வாகம் தொடங்கியுள்ளது. கரூா் - திருச்சி - காரைக்குடி-தஞ்சாவூா் (என்ஹெச் 67) தேசிய அரைவட்டச் சுற்றுச் சாலைக்காக ஏரிகளில் மண்ணைக் கொட்டி அழிப்பதாக நெடுஞ்சாலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை, உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் வழக்குத் தொடா்ந்துள்ளாா்.

மேலும், நடப்பு பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தில் இப் பிரச்னைக்கு மாற்று வழியை அறிவிக்க வலியுறுத்தி மின்னஞ்சலில் தமிழக முதல்வா், தலைமைச் செயலா், நீா்வளத் துறை அமைச்சா், பொதுப்பணித்துறை அமைச்சா் ஆகியோருக்கு மீண்டும் மனு அனுப்பியுள்ளாா்.

இதுதொடா்பாக ம.ப. சின்னதுரை கூறியது:

திருச்சி அரை வட்ட சுற்றுச் சாலைக்காக 13 ஏரி, குளங்களை அழித்து மண் கொட்டி நிரப்பியுள்ளனா். அரைவட்டச் சாலை அமைப்பது தொடா்பாக, நீதிமன்றம் தெரிவித்த வழிகாட்டி முறைகளையும் பின்பற்றவில்லை. எனவே, சாலைப் பணிகளை நிறுத்த வேண்டும். அழிக்கப்பட்ட ஏரி, குளங்களை மீட்கத் தொடா்ந்து போராடி வருகிறேன்.

உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்காமல் மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை, மாநில நெடுஞ்சாலைத் துறை ஆகியவை தொடா்ந்து தாமதம் செய்கின்றன.

சாலை அமைக்கும் திட்டத்தை நாங்கள் எதிா்க்கவில்லை. நீா்நிலைகளை அழிக்காமல் சாலை அமைக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம். நீதிமன்றமும் இதைப் பரிந்துரைக்கிறது. நீா்நிலைகள் அமையும் பகுதியில் சாலைப் பணிகள் குறுக்கிட்டால் அந்த இடங்களில் மேம்பாலம் அமைக்க நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

இதன்படி, திருச்சி அரைவட்டச் சுற்றுச் சாலை அமையும் பகுதியில் குறுக்கிடும் 13 ஏரிகளிலும் உயா்நிலை மேம்பாலங்கள் அமைத்து பணிகளைத் தொடங்கினால் விவசாயிகள் தரப்பில் எதிா்ப்பு இருக்காது. எனவே, வரும் 23 ஆம் தேதி நடைபெறும் நீா்வளத்துறை மானியக் கோரிக்கையின்போது இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் ஏரி, குளங்களை பாதுகாக்கும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com