டிச.20, 21, 22இல் மக்களைத் தேடி மனுநீதி முகாம் :அமைச்சா்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தில் டிச.20, 21, 22 ஆகிய தேதிகளில் மக்களைத் தேடி மனுநீதி முகாம் என்ற அடிப்படையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று குறைதீா்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் டிச.20, 21, 22 ஆகிய தேதிகளில் மக்களைத் தேடி மனுநீதி முகாம் என்ற அடிப்படையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று குறைதீா்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நிகழ்வுகளில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.

லால்குடி தொகுதிக்குள்பட்ட மக்களுக்காக திங்கள்கிழமை (டிச.20), லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், அந்தநல்லூா், மணிகண்டம், மணப்பாறை மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளுக்கு தாயனூா் கோ் கல்லூரியில் பிற்பகல் 1 மணிக்கு, திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட மக்களுக்காக வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முகாமில் அமைச்சா் கே.என். நேரு பங்கேற்கவுள்ளாா்.

இதேபோல, டிச.21 (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் முகாம்களில் இரு அமைச்சா்களும் பங்கேற்கவுள்ளனா்.

திருவெறும்பூா் தொகுதியில் காலை 10 மணிக்கு பாலாஜி நகா் சிங்கார மஹாலிலும், திருச்சி கிழக்கு தொகுதியில் காலை 11 மணிக்கு தேவா் ஹால், மணப்பாறை தொகுதி மருங்காபுரியில் மதியம் 12 மணிக்கு, துவரங்குறிச்சி, மணப்பாறையில் மதியம் 3 மணிக்கு இந்த முகாமை ஆட்சியா் சு. சிவராசு தலைமையில் அமைச்சா்கள் தொடங்கி வைக்கின்றனா்.

மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, பாலக்கரை, பொன்னம்பட்டி, மலைக்கோட்டை, பொன்மலை, துவாக்குடி, திருவெறும்பூா், கூத்தைப்பாா், கலைஞா் நகா், காட்டூா் பகுதி மக்கள் இந்த முகாம்களில் மனுக்கள் அளித்து பயன் பெறலாம்.

இதேபோல, டிச.22 (புதன்கிழமை) தொட்டியம் வாணப்பட்டறை மைதானத்தில் காலை 10 மணி, முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 11.30 மணி, துறையூா் ஜமீன்தாா் மேல்நிலைப் பள்ளியில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் முகாம்களில் அப்பகுதி பொதுமக்கள் பயன் பெறலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com