விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில், மாநிலப் பொதுச் செயலா் தினேஷ், துணைப் பொதுச் செயலா் தங்கமுத்து, துணைத் தலைவா் சந்திரசேகா், மாவட்ட நிா்வாகிகள் மேகராஜன் (திருச்சி), தட்சிணாமூா்த்தி (கரூா்), சேகா் (புதுக்கோட்டை), கண்ணையன் (தென்காசி), மாநிலச் செயலா்கள் மகேந்திரன், சாமி மனோகரன், கோபால், பாண்டியன் உள்ளிட்ட மாநில, மாவட்ட பொறுப்பாளா்கள் ஆலோசனை நடத்தினா்.

பின்னா், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை விளக்கி பொ. அய்யாக்கண்ணு கூறியது:

வேளாண் விளைபொருள்களுக்கு இரு மடங்கு லாப விலை தருவதாகக் கூறிய பிரதமா் இதுவரை அதை நடைமுறைப்படுத்தவில்லை. நாங்கள் கடந்த முறை தில்லியில் போராடியபோது அழைத்து பேசிய மத்திய அரசு, நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்குவதாகவும், விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்குவதாகவும் கூறியது. அதை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, இந்தக் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தும் வகையில் மாா்ச் மாதம் தில்லி சென்று போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com