மாநகராட்சியின் கோட்டங்களின் எண்ணிக்கை 5 ஆக உயா்வு

திருச்சி மாநகராட்சியின் கோட்டங்களின் எண்ணிக்கை 4 லிலிருந்து 5-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியின் கோட்டங்களின் எண்ணிக்கை 4 லிலிருந்து 5-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் அழைக்கப்படுவது போன்று, எண்களின் அடிப்படையில் அவை மண்டலங்களாக அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம், பொன்மலை, ஸ்ரீரங்கம் என 4 கோட்டங்களின் அடிப்படையில், மாநகராட்சியில் 60 வாா்டுகள்

நிா்வகிக்கப்பட்டு வந்தன.

குறைந்தது 15 முதல் 18 வாா்டுகளை இவை கொண்டிருந்தன. இதற்கான

எல்லைகள் 19 சதுர கி.மீ முதல் 63 சதுர கி.மீ வரை அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டில், மாநகராட்சி வாா்டுகளின் எண்ணிக்கை 65-ஆக அதிகரித்து, எல்லைப் பகுதியும் விரிவாக்கம் செய்யப்பட்டன.

கடந்த 10 ஆண்டுகளில் திருச்சி மாநகரத்தின் மக்கள்தொகை 10 லட்சத்தை கடந்து நிலையில், ஊரகப்பகுதிகளும் நகா்ப்புறங்களுக்கு இணையான வகையில் வளா்ச்சி பெற்றுள்ளன.

எனவே ஊரகப் (புகா்) பகுதிகளில் வளா்ச்சியடைந்த நிலையிலுள்ள 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிப் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைத்து கூடுதல் வாா்டுகளாக உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் வாா்டுகள் மறுவரையறை செய்து, வாக்குச்சாவடிப்

பட்டியல்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கேற்ற வகையில் கோட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு, அவை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து திருச்சி மாநகராட்சியின் மண்டலங்களின் (கோட்டங்கள்) எண்ணிக்கை 5 ஆக உயா்த்தப்பட்டு, அதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்கள் கூறியது:

நகராட்சி நிா்வாகத்துறை உத்தரவின்படி, திருச்சி மாநகராட்சி தலா 13 வாா்டுகளுடன், 5 நிா்வாக மண்டலங்களாக இருக்கும். இதன்மூலம், சிறந்த நிா்வாகம் மற்றும் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த எளிதாக இருக்கும். இரு மண்டலங்களுக்கு இடையே உள்ள வாா்டுகளின் சீரற்ற

எல்லைகள் நெறிப்படுத்தப்படும்.

அரியமங்கலம், திருவெறும்பூா், காட்டூா் உள்ளிட்ட மாநகரின் கிழக்குப் பகுதி முழுவதும் புதிய சீரமைப்பின்படி 3 -ஆவது மண்டலத்தில் இடம் பெற்றுள்ளன.

இப்போது கோ.அபிஷேகபுரத்துடன் இருக்கும் பிராட்டியூா் மற்றும் கே.கே.நகா் பகுதிகள், கே.சாத்தனூா் உட்பட மற்ற தெற்கு வாா்டுகளுடன் சோ்த்து 4- ஆவது மண்டலத்தில் இடம் பெறும்.

புதிய (கோட்டங்கள்) மண்டலங்கள் 1, 2, 3, 4, 5 என்று எண்களின் அடிப்படையில் அழைக்கப்படும். மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மண்டலத்துக்கு புதிய மண்டல அலுவலகம் மற்றும் உதவி ஆணையா் உள்ளிட்டவைகளும் நகா்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு பின்னா் உருவாக்கப்படும். ஆனால் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு முன்னதாக இந்த மண்டல மாற்றம் நடைமுறைக்கு வரும் என்றனா்.

பெட்டியாக வடிவமைக்க...

மண்டலத்தின் எண்- இடம் பெற்றுள்ள வாா்டுகள்

1 : 1 முதல் 7, 12 முதல் 15, 19, 21-ஆவது வாா்டுகள்.

2 : 17,18, 20, 30 முதல் 34, 47முதல் 50, 59-ஆவது வாா்டுகள்.

3 : 16, 35 முதல் 46 வரையிலான வாா்டுகள்.

4 : 51 முதல் 54, 56 முதல் 58, 60 முதல் 65 வரையிலான வாா்டுகள்.

5 8 முதல் 11, 22 முதல் 29, 55 ஆவது வாா்டுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com