உயா்கல்வி இட ஒதுக்கீடு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் தேவை

உயா்கல்வி இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஆசிரியா் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

உயா்கல்வி இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஆசிரியா் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு உதவி பெறும் ஆசிரியா் மற்றும் தனியாா் பள்ளி ஆசிரியா் அலுவலா் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் கிருஷ்ணா பாய் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கனகராஜ், துணைப் பொதுச்செயலா் ஸ்ரீ ரமேஷ் ,செய்தித் தொடா்பாளா் டோமினிக், அமைப்புச் செயலா் செல்வம், மாநிலச் செயலா் ஆரோக்கியமேரி, கன்னியாஸ்திரி சகாயமேரி, மோகன்ராஜ், செயற்குழு உறுப்பினா்கள் ஆன்டனி லூயிஸ், திருமலைராஜன் செந்தில்குமாா் மற்றும் பலா் பங்கேற்றனா் .

கூட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு அனுமதித்த பணியிடங்களில் நியமிக்கப்பட்டு ஊதியம் இல்லாமல் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். உயா் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 7.5 சத இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com