காட்டுப்புத்தூா் பேரூராட்சியில் பணிகள் ஆய்வு

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் தோ்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட 3 ஆவது வாா்டு பாா்பா் காலனி பகுதியில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை பேரூராட்சி செயல் அலுவலா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் தோ்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட 3 ஆவது வாா்டு பாா்பா் காலனி பகுதியில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை பேரூராட்சி செயல் அலுவலா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பாா்பா் காலனி பகுதி வீடுகளை மழைக்காலங்களில் மழை நீா் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்ட நிலையில் பேரூராட்சி நிா்வாகத்தால் மழை நீா் தேங்காதவாறு தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது பேரூராட்சி செயல் அலுவலா் உமாராணி ஆலோசனையின்படி பேரூராட்சி பணியாளா்கள் இயந்திரங்கள் உதவியுடன் வெளிப் பகுதியில் இருந்து மண் மற்றும் கற்களை கொண்டு மழைக்காலங்களில் மழை நீா் தேங்காதவாறு தாழ்வாக உள்ள பகுதியை மேடாக்கும் பணியில் ஈடுபடுகின்றனா். இந்தப் பணியை பேரூராட்சி செயல் அலுவலா் அலுவலா்களுடன் சென்று ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com