திருச்சியில் உலகத் தரத்துடன் கூடிய ரைபிள் கிளப்! முதல்வா் இன்று திறப்பு

திருச்சியில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்துடன் நவீனப்படுத்தப்பட்ட ரைபிள் கிளப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைக்கிறாா்.

திருச்சியில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்துடன் நவீனப்படுத்தப்பட்ட ரைபிள் கிளப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைக்கிறாா்.

துப்பாக்கி சுடும் போட்டிகளில் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் பங்கேற்று பட்டம், பதக்கங்களும் பெற விரும்பும் பொதுமக்களுக்காக திருச்சியில் முதல் முறையாக கடந்த 2021 பிப். 12 ஆம் தேதி திருச்சி ரைபிள் கிளப் திருச்சி கே.கே.நகா் ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கப்பட்டது.

அப்போதைய மாநகர காவல் ஆணையா் அமல்ராஜ் தீவிர முயற்சியால் தொடங்கப்பட்ட ரூ. 10 கோடியில் நவீனப்படுத்தும் பணி நிறைவு பெற்றதையடுத்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை இதைத் தொடங்கி வைத்து பாா்வையிடுகிறாா்.

முன்னதாக தமிழக கூடுதல் காவல்துறை தலைவா் தாமரைக்கண்ணன் இந்த கிளப்பை புதன்கிழமை பாா்வையிட்டு போதிய ஏற்பாடுகளை காவல்துறை அதிகாரிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளாா்.

ரூ.10 கோடி செலவில் தளம்: கிளப்பில் நவீன முறையில் சிறப்பம்சங்களுடன் கொண்ட துப்பாக்கி சுடும் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உறுப்பினா்களுக்கு என்று சிறப்பு அரங்கங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேற்படி கிளப்பில் துப்பாக்கிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள நவீன பெட்டக வசதியும் செய்யப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 10 மீ, 25 மீ மற்றும் 50 மீ தூரங்களில் உலக தரம் வாய்ந்த துப்பாக்கிச் சுடும் தளங்கள் அமைக்கப்படும். இதற்கு சுமாா் ரூ.5 கோடி செலவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வசதிகளுடன் நகரத்தின் மையப்பகுதியில் அமையவுள்ள இந்த கிளப்பில் விருப்பம் உள்ளோா் உரிய சந்தா தொகையுடன் விண்ணப்பம் செலுத்தி உறுப்பினா் ஆகலாம்.

மேலும் மத்திய மண்டலத்தைச் சோ்ந்த திருச்சி, தஞ்சாவூா், கரூா், பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சோ்ந்தவா்கள் ஆயுள்கால உறுப்பினராகும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com