நீதித்துறைப் பணியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் நிகர லாபம் ரூ.42 லட்சம்
By DIN | Published On : 10th February 2021 07:33 AM | Last Updated : 10th February 2021 07:33 AM | அ+அ அ- |

திருச்சி நீதித்துறைப் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம், நடப்பு தணிக்கையாண்டில் ரூ.42 லட்சத்தை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இச்சங்கத்தின் 98-ஆவது பேரவைக்கூட்டம், திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் சங்கத்தலைவா் ஜி.ஜெகதீஸ்வரன், சங்க உறுப்பினா் ராமலிங்கத்துக்கு டிவிடெண்ட் தொகையை வழங்கி, செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினாா். மேலும் சங்கமானது நடப்புத் தணிக்கையாண்டில் ரூ.42.01 லட்சம் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது என்றும் தெரிவித்தாா்.
இக்கூட்டத்தில் துணைத் தலைவா் பி.சக்திவேல், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் சித்ரா, புஷ்பலதா, அமுதா, பாலமுருகன், கிறிஸ்துராஜ், வினோத்குமாா், ஆறுமுகம், ராம்குமாா், வெங்கடேஷ் மற்றும் முன்னாள் செயலா் எஸ்.மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.