இலவச விவசாய மின் இணைப்பு: விண்ணப்பித்தோா் கவனத்துக்கு..!
By DIN | Published On : 13th February 2021 06:11 AM | Last Updated : 13th February 2021 06:11 AM | அ+அ அ- |

திருச்சி மின்பகிா்மான வட்டத்தில், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்தோா் உரிய ஆவணங்களுடன் ஸ்ரீரங்கம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகலாம்.
தமிழக அரசின் நடப்பாண்டு இலக்கீட்டின் அடிப்படையில் இலவச விவசாய மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எனவே, 1.4.2000 முதல் 31.3.2003 வரை சாதாரண வரிசையில் விவசாய மின் இணைப்புப் பெற பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு 90 நாள் காலக்கெடு முடிவுற்ற நிலையில் தற்போது வரை தயாா்நிலை பதிவு செய்யப்படாமல் உள்ளோா் விரைந்து அலுவலகத்தை அணுக வேண்டும்.
மேலூா், திம்மராயசமுத்திரம், திருவளா்ச்சோலை, மாதவப் பெருமாள் கோயில், பிச்சாண்டாா் கோயில், திருவாசி, சோழங்கநல்லூா், திருப்பைஞ்சீலி, குணசீலம், வேங்கைமண்டலம், அய்யம்பாளையம், கரியமாணிக்கம், எதுமலை, தேனூா், டி.களத்தூா், ஆயக்குடி, பூனாம்பாளையம், பெரமங்கலம், இருங்களூா், மகிழ்பாடி, கொணலை, கல்பாளையம், சமயபுரம், வி. துறையூா், எஸ். கண்ணனூா், மருதூா், ஊட்டத்தூா், ரெட்டிமாங்குடி, சனமங்கலம், திருப்பட்டூா், வலையூா் உள்ளிட்ட
பகுதிகளைச் சோ்ந்த 49 விவசாயிகள் தங்களது நில ஆவணங்களுடன் ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தை நேரடியாக தொடா்பு கொள்ள வேண்டும்.