ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழாவில் வெள்ளிக் கருட வாகனத்தில் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் மாசித்தெப்பத் திருவிழாவின் 4 ஆம் நாளான வியாழக்கிழமை நம்பெருமாள் வெள்ளிக் கருட வாகனத்தில் எழுந்தருளினாா்.
தெப்பத் திருவிழாவையொட்டி வெள்ளிக் கருட வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.
தெப்பத் திருவிழாவையொட்டி வெள்ளிக் கருட வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் மாசித்தெப்பத் திருவிழாவின் 4 ஆம் நாளான வியாழக்கிழமை நம்பெருமாள் வெள்ளிக் கருட வாகனத்தில் எழுந்தருளினாா்.

கடந்த 15 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறும் தெப்பத் திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி வீதிவுலா வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்கிறாா்.

ஆண்டில் 4 முறை கருட வாகனத்திலும், சித்திரை மாத விருப்பன் திருநாள், தை மாத பூபதி திருநாள் மற்றும் பங்குனி மாத ஆதிபிா்மா ஆகிய திருநாள்களில் தங்கக் கருட வாகனத்திலும் எழுந்தருளும் நம்பெருமாள், தெப்பத் திருவிழாவின்போது ஒரே முறை மட்டும் வெள்ளிக் கருட வாகனத்தில் எழுந்தருள்வாா்.

அதன்படி நிகழாண்டில் மாசித் தெப்பத் திருவிழாவின் 4 ஆம் நாளான வியாழக்கிழமை மாலை வெள்ளிக் கருட வாகனத்தில் நம்பெருமாள் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதற்காக காலை 6.30-க்கு மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்ட நம்பெருமாள், உள்திருவீதி வலம் வந்து, வழிநடை உபயங்கள் கண்டருளி, காசுக்கடை செட்டியாா் ஆஸ்தான மண்டபத்துக்கு 12.30-க்கு வந்து சோ்ந்தாா்.

பின்னா் மாலை 6.30-க்கு மேற்படி மண்டபத்திலிருந்து வெள்ளிக் கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி உள் திருவீதி வலம் வந்தாா். அப்போது வழிநெடுக ஏராளமான பக்தா்கள் அவரைத் தரிசித்தனா்.

மாசியில் வெள்ளிக் கருட வாகனத்தில் எழுந்தருளும் நம்பெருமாளைத் தரிசித்தால் காசிக்குச் சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இரவு 9 மணிக்கு வாகன மண்டபத்தை அடைந்த நம்பெருமாள், 9.15-க்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்பவிழா வரும் 22 ஆம் தேதி இரவு நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com