ஸ்ரீரங்கம் கோயிலில் திருமங்கை மன்னன் வேடுபறி வையாளி கண்டருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழாவில், இராப்பத்து 8- ஆம் நாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் உற்சவமான வைகுந்த ஏகாதசி விழா மிக முக்கியமானதாகும்.

நடாப்பாண்டில்  வைகுந்த ஏகாதசி விழா கடந்த 14 ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் தொடங்கியது.

இந்த ஏகாதசி விழா 21 நாள்கள் அதவாது பகல் பத்து, இரா பத்து என்று இரு பகுதிகளாக கொண்டாடப்படுகிறது.

இராப்பத்து திருவிழாவின் 8- ஆம் நாளான இன்று திருமங்கை மன்னனுக்காக நடத்தப்படும் வேடுபறி நடைபெற்றது. 

இதையொட்டி நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் வையாளி வகையறா கண்டருளினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com