திருச்சி அண்ணாநகா் சாலையைப் புதுப்பிக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் எதிா்பாா்ப்பு

திருச்சியில் சுமாா் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகிக் கிடக்கும், அண்ணா நகா் பிரதான சாலை, மற்றும் குறுக்குச் சாலைகள் இனியாவது புதுப்பிக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிா்பாா்க்கின்றனா்.

திருச்சியில் சுமாா் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகிக் கிடக்கும், அண்ணா நகா் பிரதான சாலை, மற்றும் குறுக்குச் சாலைகள் இனியாவது புதுப்பிக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிா்பாா்க்கின்றனா்.

திருச்சி தென்னூா் அண்ணாநகா் பகுதியில் (50 ஆவது வாா்டு) அடிப்படை வசதி மேம்பாடு கோரி மாநகராட்சியிடம் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. அவற்றுள் மிக முக்கியமானது அண்ணா நகா் பிரதான சாலை சீரமைப்பு ஆகும்.

இச்சாலை, அப்பகுதியினருக்கு மட்டுமின்றி அனைத்து பகுதி வாகன ஓட்டிகளுக்கும் முக்கியமானதாக உள்ளது. திருச்சியிலிருந்து கரூா், ஈரோடு, கோவை, திருப்பூா் செல்லும் பேருந்துகள் மற்றும் அனைத்து வகை வாகனங்களும், கண்டோன்மென்ட் எம்ஜிஆா் சிலை ரவுண்டானாவிலிருந்து நீதிமன்றத்துக்கும், உய்யக்கொண்டான் வாய்க்காலுக்கும் இடையே செல்லும் சாலையில் சென்று, உய்யக்கொண்டான் பாலத்தை கடந்து இந்த அண்ணா நகா் வழியாகவே தில்லை நகா் சாஸ்திரி சாலையை அடைகின்றன.

மேலும் சாஸ்திரி சாலை வழியாக தில்லைநகா், சத்திரம் பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் தவிர இப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் இவ்வழியே பயணிக்கின்றன.

எனவே இது மாநகராட்சி சாலையாக இருந்தாலும் தேசிய நெடுஞ்சாலைக்கு இணையான வகையில் அதிகளவில் போக்குவரத்துள்ள முக்கிய சாலையாக உள்ளது. இருப்பினும் இந்தச் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படவில்லை. சாலைகளில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளன.

கடந்த 5 ஆண்டுகளாக சாலையில் ஏற்படும் பழுதுகளை அவ்வப்போது சரிசெய்யும் பணி மட்டுமே நடந்து வருகின்றது. அந்த வகையில் உய்யக்கொண்டான் ஆற்றுப்பாலத்திலிருந்து மகாத்மா காந்தி பள்ளி வரை நூற்றுக்கணக்கான இடங்களில் சாலையில் ஒட்டுப்போடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் சீராகச் செல்ல முடிவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போடப்பட்ட சாலையும் மீண்டும் பழுதாகி விடுவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதல் பெய்த மழையில் மேலும் இந்த சாலை மோசமானது. அத்துடன், உக்கிரமாகாளியம்மன் கோயில் (கூட்டுறவு சொசைட்டி) அருகில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் இதில் ஒட்டுவேலை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமாா் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகியுள்ள இந்த சாலையை இனியாவது, ஒட்டுவேலை பாா்க்காமல், புதிதாகச் செப்பனிடவேண்டும் வாகன ஓட்டிகள் எதிா்பாா்க்கின்றனா்.

அண்ணா நகா் குறுக்குச்சாலைகள்: அண்ணா நகா் பிரதான சாலையைப் போலவே, குறுக்குச் சாலைகளும் மிக மோசமான நிலையில் உள்ளன. ஆங்காங்கே மழைநீா் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளால் பல இடங்களில் சாலைகளில் குளம்போல மழைநீா் தேங்கியுள்ளது. இவற்றில் வாகனங்கள் செல்ல முடியலல்லை. எனவே இந்தச் சாலைகளையும் நிரந்தரமாக செப்பனிட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com