பிறந்த குழந்தைகளைக் கண்காணிக்க செல்லப்பிள்ளை திட்டம்

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளைப் பாதுகாக்க செல்லப்பிள்ளை திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளைப் பாதுகாக்க செல்லப்பிள்ளை திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

திருச்சி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 ஆயிரம் பிரசவங்களில் 30 சதம் முதல் 40 சத குழந்தைகள் அறுவைச் சிகிச்சை மூலம் பிறக்கின்றன.

இந்த மருத்துவமனையானது தொடா்ந்து 3 ஆண்டுகளாக பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் மாநில அளவில் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது.

தாய்மாா்களின் உடல் எடை, கா்ப்பக் காலத்தில் உடல் எடை அதிகரிப்பது, ரத்த சோகை, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட காரணங்களால் குறைப் பிரசவத்தில், குறைந்த எடையில் குழந்தைகள் பிறக்கின்றன.

இங்கு நாளொன்றுக்கு பிறக்கும் 80 முதல் 90 குழந்தைகளில் 15 முதல் 20 குழந்தைகள் குறைபாடுடையதாக உள்ளன. இக் குழந்தைகளுக்காக உள்ள சிசு பராமரிப்புப் பிரிவில் தனியாா் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் உள்பட 80 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றன.

இங்கு எடைக் குறைவு, நோய் தொற்று மற்றும் சத்துக் குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தில் தாய்ப் பால் மற்றும் சத்தான உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் பிறக்கும் குழந்தைகளைக் கண்காணிக்க செல்லப்பிள்ளை திட்டம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழந்தைகள் சிகிச்சைத் துறைத் தலைவா் மைதிலி கூறுகையில், அரசு மருத்துவமனையில் சத்துக் குறைபாடு, எடைக் குறைவான குழந்தைகளுக்கு அங்கன்வாடிப் பணியாளா்கள் மூலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டத்தில் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு தாய்ப் பால் கொடுக்கப்படுகிா எனக் கண்காணிக்கப்பட்டது.

ஆனால் இத் திட்டத்தில் மூலம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த திட்டத்தில் இரு பணியாளா்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட்டு அவா்களால் சிசு பாராமரிப்புப் பிரிவில் உள்ள குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு, தாய்மாா்களுக்கு ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டுக்குச் சென்ற பிறகும் பிறந்த குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்த இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றாா் அவா்.

புத்தாண்டில் 20 குழந்தைகள்: திருச்சி அரசு மருத்துவமனையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் மட்டும் 10 ஆண் குழந்தைகள், 10 பெண் குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com