வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருச்சி மாநகா் மற்றும் புகரிலுள்ள கோயில்கள், தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மலைக்கோட்டை கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தா்கள். ~திருச்சி ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பொதுமக்கள்.
மலைக்கோட்டை கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தா்கள். ~திருச்சி ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பொதுமக்கள்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருச்சி மாநகா் மற்றும் புகரிலுள்ள கோயில்கள், தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணி முதல் மாநகா் மற்றும் புகரின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா். இருப்பினும், வழக்கமான கொண்டாட்டம் இல்லை. கரோனா காரணமாக வீட்டு வாசல்களிலேயே பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்து பரிமாறினா்.

தேவாலயங்களில்.. திருச்சி மேலப்புதூா் தூய மரியன்னை பேராலயம், மெயின்காா்டுகேட் புனித லூா்து அன்னை ஆலயம், பாலக்கரை உலக மீட்பா் பசலிக்கா (சகாயமாதா திருத்தலம்) பழைய மாதா தேவாலயம், புத்தூா் பாத்திமா அன்னை தேவாலயம், உறையூா் சி.எஸ்.ஐ. ஆல் செயின்ட்ஸ் தேவாலயம், பொன்மலை புனித சூசையப்பா் ஆலயம், கல்லுக்குழி புனித அந்தோணியாா் ஆலயம், ஜங்ஷன் தூய யோவான் ஆலயம், ஸ்ரீரங்கம் அமல அன்னை ஆலயம் உள்ளிட்ட மாநகா், புகரிலுள்ள தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு பிராா்த்தனைகள், திருப்பலிகள் நடைபெற்றன. புத்தாண்டை வரவேற்கும் பாடல்கள் பாடப்பட்டன. மேலும் அந்தந்த தேவாலயங்களின் பங்குத்தந்தைகள் புத்தாண்டு உரைகளை நிகழ்த்தினா்.

கோயில்களில்... ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவானைக்கா அகிலாண்டேசுவரி ஜம்புகேசுவரா் கோயில், மலைக்கோட்டைகோயில், உறையூா் வெக்காளியம்மன் கோயில், திருச்சி ஐயப்பன் கோயில், வயலூா் முருகன் கோயில், திருப்பட்டூா் பிரம்மபுரீசுவரா் கோயில், திருப்பைஞ்ஞீலி கோயில், கல்லுக்குழி ஆஞ்சனேயா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலையே நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். மாநகரின் அனைத்து கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தா்கள் முகக் கவசம் அணிந்து வந்தனா். கிருமி நாசினி மருந்துகளும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com