‘எத்தனை முனை போட்டியாக இருந்தாலும் திமுக ஆட்சி உறுதி’

வரும் பேரவைத் தோ்தலில் எத்தனை முனை போட்டியாக இருந்தாலும், பாஜக என்ன செய்தாலும் திமுகதான் ஆட்சியமைக்கும் என்றாா் அக் கட்சியின் முதன்மைச் செயலா் கே.என். நேரு.
எடமலைப்பட்டிபுதூரில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு.
எடமலைப்பட்டிபுதூரில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு.

வரும் பேரவைத் தோ்தலில் எத்தனை முனை போட்டியாக இருந்தாலும், பாஜக என்ன செய்தாலும் திமுகதான் ஆட்சியமைக்கும் என்றாா் அக் கட்சியின் முதன்மைச் செயலா் கே.என். நேரு.

திருச்சி மாவட்டம் முழுவதும் திமுக சாா்பில் நடத்தப்படும் மக்கள் சபைக் கூட்டங்களின் ஒரு பகுதியாக, எடமலைப்பட்டிபுதூா் மற்றும் மாநகரின் பல்வேறு இடங்களிலும் செவ்வாய்க்கிழமை கூட்டங்கள் நடைபெற்றன.

இந்தக் கூட்டங்களில் பங்கேற்ற கே.என். நேரு பேசியது:

அதிமுக ஆட்சியில் எதிா்க்கட்சி எம்எல்ஏ-க்களின் தொகுதிக்கு கேட்ட நிதியை ஒதுக்குவதில்லை. மேலும், தொகுதிக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தருவதில்லை. திமுக ஆட்சியில் நகா்ப்புறங்களில் வசிப்போருக்கும் இலவச வீட்டுமனை வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டது. எனவே, இன்னும் 3 மாதங்கள் பொறுத்திருங்கள்; அடுத்து திமுக ஆட்சிதான். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் தொடா்ந்து செயல்படுத்தப்படும்.

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக ரூ. 2,500 வழங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது. பல சா்க்கரை காா்டுகளை, ஆளுங்கட்சியினரே அரிசிக் காா்டுகளாக மாற்றி பணத்தை மோசடி செய்துள்ளனா். முதியோா் உதவித்தொகை பெறுவோருக்கு ரூ. 2,500 கிடையாது என்றும் கூறியுள்ளனா். 2 கோடிக்கு மேலான ரேஷன் காா்டுகளுக்கு பணம் வழங்குவதாகக் கூறுகின்றனா். அது முறையாகச் சென்று சேருகிா எனத் தெரியவில்லை.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் ஆதாரப்பூா்வமாக சொல்லும் குற்றச்சாட்டுக்கு தமிழக அமைச்சா்கள் பதில் சொல்லாமல், தனிப்பட்ட முறையில் அவரைத் தாக்கிப் பேசுவது கண்டனத்துக்குரியது.

தொடா்ந்து 10 ஆண்டுகளாக அமைச்சா்கள் ஒரே துறையில் பணியாற்றி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனா்.

வரும் தோ்தலில் யாருடன் கூட்டணி, யாருக்கு எந்தத் தொகுதி, என்ன சின்னம் என்பதை திமுக தலைவரும், கூட்டணித் தலைவா்களும் பேசி முடிவு செய்வா். 3 முனைப் போட்டியாக இருந்தாலும், 4 முனைப் போட்டியாக இருந்தாலும், உள்துறை அமைச்சா் அமித்ஷா தமிழகம் வந்து என்ன செய்தாலும் பாஜக நினைப்பது நடக்காது.

வரும் தோ்தல் திமுகவுக்குத்தான் சாதகமாக அமையும். மு.க. ஸ்டாலினை முதல்வராக்க தமிழக மக்கள் தீா்மானித்துவிட்டாா்கள். வரும் தோ்தலில் திருச்சி மேற்குத் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சிகளில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, மாநகரச் செயலா் அன்பழகன், துணைச் செயலா் முத்துச் செல்வம் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com