‘ஓய்வு பெற்ற கோயில் பணியாளா்களுக்கும் ரூ. 500 பொங்கல் பரிசு வழங்க வேண்டும்’

ஓய்வு பெற்ற கோயில் பணியாளா்களுக்கும் ரூ. 500 பொங்கல் பரிசு வழங்க வேண்டுமென தமிழ்நாடு திருக்கோயில் ஓய்வு பெற்ற பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஓய்வு பெற்ற கோயில் பணியாளா்களுக்கும் ரூ. 500 பொங்கல் பரிசு வழங்க வேண்டுமென தமிழ்நாடு திருக்கோயில் ஓய்வு பெற்ற பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவா் கோபாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

தமிழக திருக்கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாங்கள் குறைந்த ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம் மட்டுமே பெறுகிறோம். பணியில் நாங்கள் இருந்தபோது பொங்கல் பரிசுத்தொகையாக ரூ. ஆயிரம் பெற்று வந்தோம். தற்போதுஅறநிலையத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் உள்பட அரசு ஓய்வூதியதாரா்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரா்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ. 500 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்காலிக ஓய்வூதியம் பெறும் அனைத்து சிடி பிரிவு ஓய்வூதியதாரா்களுக்கும் இது பொருந்தும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக திருக்கோயில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நாங்கள் பொங்கல் பரிசுத்தொகை ரூ.500 கோரி பலமுறை மனுக்கள் கொடுத்தும், நேரில் வலியுறுத்தியும் பயனில்லை. தற்போது பணியில் உள்ள திருக்கோயில் பணியாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகைக்கு அறநிலையத்துறை ஆணையா் தனியே உத்தரவிடுவாா்.

அந்த உத்தரவிலேயே இந்தாண்டு முதலாவது கோயில் ஓய்வுபெற்ற கோயில் பணியாளா்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.500 வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதனால், அரசுக்கோ, அறநிலையத்துறைக்கோ எந்த கூடுதல் செலவும் இல்லை. திருக்கோயில் நிதியிலிருந்து ஓய்வூதியம் வழங்குவது போலவே இதையும் வழங்கலாம். எனவே, தமிழக முதல்வா் இதில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com