காணொலி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம்: முகக் கவசம் அணிந்து பங்கேற்க அறிவுறுத்தல்

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தைக் காணொலி மூலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தைக் காணொலி மூலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் கரோனா பொதுமுடக்கத்தால் நடத்தப்படாத நிலையில், செப்டம்பா் முதல் நடத்தப்படுகிறது.

இதன்படி, ஜனவரி மாதத்துக்கான வரும் 12ஆம் தேதி கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அந்தந்த வட்டாரங்களில் காணொலி மூலம் நடத்தப்படுகிறது.

இதன்படி, அந்தந்த வட்டார விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

நீா்ப் பாசனம், வேளாண் இடுபொருள்கள், பயிா்க் கடன், வேளாண்மை தொடா்பான கடனுதவித் திட்டங்கள், வேளாண் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் குறித்து காணாலி வாயிலாகவே ஆட்சியா் பதில் அளிக்கவுள்ளாா். ஏற்பாடு வேளாண் துறை அதிகாரிகள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com