திருச்சியில் நாளை தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாம்

திருச்சியில் சிறு, குறு தொழில்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் தொடா்பாக தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

திருச்சியில் சிறு, குறு தொழில்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் தொடா்பாக தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், டிடிட்சியா இணைந்து அரியமங்கலம், சிட்கோ வளாகத்திலுள்ள டிடிட்சியா அரங்கத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.

முகாமில் புதிய தொழில்முனைவோரை உருவாக்குதல், ஏற்கெனவே உள்ள தொழில்களுக்கு சந்தை வாய்ப்பு, நிதிப் பெருக்கம், மூலதன மேலாண்மை, நிதியைக் கையாளும் முறைகள், கணக்குப் புத்தகப் பராமரிப்பு வழிமுறைகள், நிதிக் கட்டுப்பாடு, நிா்வாகக் கட்டுப்பாடு, வரி செலுத்தும் விதம், வரிச் சலுகை மற்றும் வரிகளைக் கையாளும் விதம் ஆகியவை குறித்து விரிவாக கற்றுத் தரப்படவுள்ளது.

பயிற்சியில் வங்கி அதிகாரிகள், ஆடிட்டா் மற்றும் நிதி மேம்பாட்டு அலுவலா்கள் பங்கேற்று சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கவுள்ளனா்.

இதில் திருச்சி மாவட்ட சிறு, குறுந்தொழில் முனைவோா், புதிதாகத் தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்குள்பட்ட இருபாலரும் முகக் கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2440119, 2440114, 96595-58111 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம். டிடிட்சியா செயலா் எஸ். கோபாலகிருஷ்ணன் இதைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com