தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 07th January 2021 08:25 AM | Last Updated : 07th January 2021 08:25 AM | அ+அ அ- |

பேரணியை தொடக்கி வைக்கிறாா் மாநகர காவல்துறை ஆணையா் லோகநாதன். உடன் மாநகர காவல்துறை துணை ஆணையா்கள் பவன்குமாா் ரெட்டி, வேதரத்தினம் உள்ளிட்டோா்.
திருச்சியில் தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தும் விதமாக மாநகர போக்குவரத்துக் காவல் துறை சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பேரணியைத் தொடங்கி வைத்தாா். துணை ஆணையா்கள் வேதரத்தினம் (குற்றம் மற்றும் போக்குவரத்து), பவன்குமாா் ரெட்டி (சட்டம் ஒழுங்கு) மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனா். தலைக்கவசம் அணிந்த நிலையில், திருச்சி தலைமை அஞ்சலகத்தில் புறப்பட்ட வாகனப் பேரணி, நீதிமன்றம், புத்தூா், தில்லைநகா், கோஹினூா் சந்திப்பு, கரூா் புறவழிச்சாலை வழியாக அண்ணா சிலையை அடைந்தது.
தொடா்ந்து மாநகரில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றோரை நிறுத்தி விழப்புணா்வு ஏற்படுத்தி, வாகனங்களில் விழிப்புணா்வு ஸ்டிக்கா்களையும் போலீஸாா் ஒட்டினா்.