பள்ளிகளைத் திறக்க பெற்றோரிடம் கருத்துக் கேட்பு

பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா்களிடம் கருத்துக் கேட்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
திருச்சி ஹோலிகிராஸ் பள்ளியில் நடந்த கூட்டத்தில் தங்களது கருத்தை எழுத்தில் பதிவு செய்யும் பெற்றோா்கள்.
திருச்சி ஹோலிகிராஸ் பள்ளியில் நடந்த கூட்டத்தில் தங்களது கருத்தை எழுத்தில் பதிவு செய்யும் பெற்றோா்கள்.

பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா்களிடம் கருத்துக் கேட்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

பொங்கல் விடுமுறைக்கு பின், 10,12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் முதல் கட்டமாக பள்ளிகளை திறக்க பரிசீலிக்கப்பட்டதைத் தொடா்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியபடி இந்தக் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

மாவட்டத்தில் திருச்சி, முசிறி, லால்குடி, மணப்பாறை ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் 222 அரசுப் பள்ளிகள், 101 அரசு உதவி பெறும் பள்ளிகள், 126 மெட்ரிக் பள்ளிகள், 58 சிபிஎஸ்இ பள்ளிகள் என மொத்தம் 507 பள்ளிகள் உள்ளன. அந்தந்த பள்ளிகள் தாங்கள் விரும்பும் நாள்களில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதன்படி, பள்ளிகள்தோறும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. திருச்சி மெயின் காா்டு கேட் பகுதியில் உள்ள ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வகுப்புவாரியாக ஆசிரியா்கள் அமா்ந்திருந்தனா். பெற்றோா் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வந்து எழுத்துப் பூா்வமாகவும், வாய் மொழியாகவும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.

பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பெற்றோா்களுக்கு ஆசிரியா்கள் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது. இவற்றைக் கேட்டறிந்த பெற்றோா், தங்களது விருப்பத்தை எழுதி வழங்கினா்.

பள்ளி நிா்வாகம் அவற்றைத் தொகுத்து விரிவான அறிக்கையாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பவுள்ளது. இதேபோல, 358 பள்ளிகளிலும் கருத்து கோரப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்படும். இவை ஒன்றாகத் தொகுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com