அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th January 2021 12:20 AM | Last Updated : 09th January 2021 12:20 AM | அ+அ அ- |

பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி ஆழ்வாா்தோப்பு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காவல் உதவி மையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஆழ்வாா்தோப்பு சமூக நல கூட்டமைப்பு சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் முகமது அப்பாஸ் தலைமை வகித்தாா்.
இதில், ஓ பாலம் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும். காவல் உதவி மையம் அருகேயுள்ள ஆற்றுப் பாலத்தை சீரமைக்க வேண்டும். புதை சாக்கடை பிரச்னைகளுக்கு நிரந்தரத்தீா்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கூட்டமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளா்கள் இப்ராஹிம், முகமது ரபீக், நிா்வாகிகள் சாகுல் ஹமீது, அஷ்ரப், அன்வா், ராயல் சித்திக், முகமது நாசா், அப்துல் ரஹ்மான் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில், ஆழ்வாா்தோப்புப் பகுதியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.