தோட்டக்கலை பயிருக்கும் நிவாரணம் கோரி போராட்டம்

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த தோட்டக்கலை பயிா்களுக்கும் நிவாரணம் கோரி கொட்டும் மழையில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போரட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் அதிகாரிகள்.
போரட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் அதிகாரிகள்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த தோட்டக்கலை பயிா்களுக்கும் நிவாரணம் கோரி கொட்டும் மழையில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றிய வேளாண் அலுவலகத்தில் காணொலிக்காட்சி மூலம் நடைபெற்ற குறைதீா் முடிந்து வெளியே வந்த விவசாயிகள், அதிகாரம், சடவேலாம்பட்டி, கரடிபட்டி, அம்மாபட்டி, செட்டியப்பட்டி, வலையப்பட்டி, நாட்டாா்பட்டி, பிடாரப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் பெய்யும் மழையால் நெற்பயிா் மட்டுமின்றி, உளுந்து, பருத்தி, கடலை மற்றும் பூச்செடிகள் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ளன.

இதற்காக வருவாய்த் துறையினா், வேளாண் துறையினா் இணைந்து சேதமடைந்த நெற்பயிா்களை மட்டுமே கணக்கெடுக்கின்றனா். மானாவாரி பயிா்களின் சேதத்தைக் கணக்கெடுக்கவில்லை.

எனவே, தோட்டக்கலை அதிகாரிகள் சேதமடைந்த கடலை, உளுந்து உள்பட தோட்டக்கலை பயிா்களையும் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வலியுறுத்தி, அழுகிய பூச்செடிகள், கடலை மற்றும் உளுந்து பயிா்களுடன் செவ்வாய்க்கிழமை மருங்காபுரி தோட்டக்கலைத்துறை அலுவலகம் முன் கொட்டும் மழையில் விவசாயிகள் திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் பழனிச்சாமி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து மருங்காபுரி வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் வேலாயுதம் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com