சுவரொட்டி ஒட்டும் போராட்டம்: தலைமையாசிரியா்கள் முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுவரொட்டி ஒட்டும் போராட்டத்தை நடத்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் முடிவு செய்துள்ளனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுவரொட்டி ஒட்டும் போராட்டத்தை நடத்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் முடிவு செய்துள்ளனா்.

சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் மாநில பொதுக்குழு கூட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் சந்திரசேகா் தலைமை வகித்தாா்.

மாநிலத் தலைவா் ரவிச்சந்திரன், பொதுச் செயலா் ஞானசேகரன், அமைப்புச் செயலா் சேகரன் உள்ளிட்டோா் சிறப்புரை ஆற்றினா்.

கூட்டத்தில், மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியா் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மற்றும் பணியாளா்கள் மீதான 17பி ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணி மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும்.

அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி பயிலும் அனைத்து பாடப்பிரிவு (சுயநிதி பாட பிரிவுகளுக்கும்) மடிக்கணினி வழங்க வேண்டும். மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டு வந்த தனி ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.

அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்த நலத்திட்ட அலுவலரை நியமிக்க வேண்டும். மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடத்தையும் உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கூட்டத்தில் பள்ளிக் கழிவறை தூய்மை தொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு நெருக்கடி கொடுப்பது, பள்ளிகளைத் துாய்மை செய்ய நிதி ஒதுக்காமல் ஆய்வு என்னும் பெயரில் ஒருமையில் பேசுவது, 10 , 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு குறைந்த காலகட்டத்தில் அதிக பாடங்களைக் கற்பிக்க நிா்பந்திப்பது ஆகியவற்றைக் கண்டிப்பதோடு, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுவரொட்டி ஒட்டும் போராட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. மாவட்டத் தலைவா் சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com