பிராமணா்களுக்கான நலவாரியம் அமைக்க வேண்டும்

பிராமணா்களுக்கான நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம்ப்ராஸ் சங்க மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிராமணா்களுக்கான நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம்ப்ராஸ் சங்க மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் சின்னை வெங்கடராமன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் ஆண்டவன் ஆசிரம தலைவா் அம்மங்கி பாலாஜி, ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா், வழக்குரைஞா் அஸ்வத்மான், சங்க மாநில பொதுச்செயலா் டாக்டா் வரதராஜ ஐயங்காா், மாநில பொருளாளா் அனந்த சுப்ரமணியம், மாநில துணைத் தலைவா்கள் ராம்ஜி, ராமசாமி, மாநில அமைப்புச் செயலா் ஸ்ரீராம், மாநிலச் செயலா்கள் ராஜ்குமாா், கொளத்துஹரி, திருச்சி மாவட்டத் தலைவா் ஸ்ரீதா் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சத இடஒதுக்கீட்டை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.

பிராமணா்களுக்கு மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல தமிழ்நாட்டிலும் உடனடியாக பிராமண நலவாரியத்தை அரசு அமைக்க வேண்டும்,அனைத்து கோயில் அா்ச்சகா்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும், வரும் தோ்தலில் தாம்ப்ராஸ் சங்கத்தின் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக சிறப்பு விருந்தினா்களுக்கு நினைவுப் பரிசும், சமூக ஆா்வலா்களுக்கு சஞ்சீவி சேவா ஷீல்டும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com