தேசிய வாக்காளா் தின உறுதிமொழியேற்பு
By DIN | Published On : 26th January 2021 12:57 AM | Last Updated : 26th January 2021 12:57 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழியேற்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா் தலைமையில் அலுவலா்கள் உள்ளிட்டோா் உறுதிமொழியேற்றுக் கொண்டனா். தொடா்ந்து 11 பேருக்கு வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கரோனா விழிப்புணா்வு ஓவியப்போட்டியில் வென்ற மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா் சதீஷ்குமாா் உள்ளிட்ட 3 பேருக்கும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் 10 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக பெரியாா் ஈ.வெ.ரா. கல்லூரியைச் சோ்ந்த 300 மாணவா்கள் பங்கு பெற்ற விழிப்புணா்வுப் பேரணி திருச்சி ரயில்வே சந்திப்பிலிருந்து தொடங்கி மருத்துவக் கல்லூரி வழியாக சென்று ஆட்சியரக வளாகத்தில் நிறைவடைந்தது.
நிகழ்வில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ச.ஜெயப்பிரித்தா, அலுவலக மேலாளா்(குற்றவியல்) சிவசுப்ரமணியம்பிள்ளை, பெரியாா் ஈ.வெ.ரா. கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியா் குணசேகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.