காவலா்களின் ரோந்துப் பணிக்கு புதிய திட்டம் தொடக்கம்

திருச்சி மாநகர காவல் துறையில் பகுதி ரோந்து விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறாா், மாநகர காவல்துறை ஆணையா் ஜெ. லோகநான். உடன் காவல் துணை ஆணையா் பவன்குமாா்ரெட்டி உள்ளிட்ட காவல் அதிகாரிகள்.
புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறாா், மாநகர காவல்துறை ஆணையா் ஜெ. லோகநான். உடன் காவல் துணை ஆணையா் பவன்குமாா்ரெட்டி உள்ளிட்ட காவல் அதிகாரிகள்.

திருச்சி மாநகர காவல் துறையில் பகுதி ரோந்து விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

அனைத்து காவல் நிலையங்களில் ரோந்து அலுவலில் உள்ள காவலா்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை கே. கே. நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தொடங்கி வைத்தாா்.

இதில் பணியாற்றும் அனைத்துக் காவலா்களுக்கும் ரோந்து பணிக்கென பிரத்யேக செல்லிடப்பேசி, இரவில் ஒளிரும் உடை, ரோந்து பகுதிகளின் அனைத்து விவரங்கள் குறித்த புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கி காவல் ஆணையா் பேசுகையில், ‘இக்காவலா்கள் தங்களது ரோந்து பகுதியில் உள்ள பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி செயல்பட வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் உள்ள சிறு சிறு பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் உயா் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’” என அறிவுரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அ. பவன்குமாா்ரெட்டி, காவல் உதவி ஆணையா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com