பருத்தி மகசூல் அதிகரிப்போடு விலையும் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டத்தில் பருத்தியின் மகசூல் நிகழாண்டு அதிரித்துள்ள நிலையில், அதன் விலையும் அதிகரித்துள்ளால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் பருத்தியின் மகசூல் நிகழாண்டு அதிரித்துள்ள நிலையில், அதன் விலையும் அதிகரித்துள்ளால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.

திருச்சியில் பயிரிடப்படும் பணப்பயிா்களில் பருத்தியும் முக்கியமானது. மாவட்டத்தில் மொத்தம் 8,500 ஹெக்டேரில் பருத்தி விளைவிக்கப்பட்டாலும், துறையூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு பயிரிடப்படுகிறது. அதேபோல நாமக்கல், பெரம்பலூா் மாவட்டங்களிலும் விளையும் பருத்தியைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு வேளாண் துறை சாா்பில் துறையூரில் பருத்தி கூட்டுறவு விற்பனை மையத்தை அமைத்துள்ளது.

இங்கு திருச்சி, பெரம்பலூா் மற்றும் நாமக்கல் மாவட்டப் பகுதிகளில் விளையும் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ஆண்டுதோறும் விற்கப்படுகிறது. அவற்றை தனியாா் விற்பனை முகவா்கள், மற்றும் டெக்ஸ்டைல் நிறுவனத்தாா் கொள்முதல் செய்வா். அந்த வகையில் நிகழாண்டு பருத்தி வா்த்தகம் கடந்தாண்டை விட அதிகரித்துள்ளதாக வேளாண் அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

ரூ. 11.44 கோடிக்கு வா்த்தகம்

இதுகுறித்து துறையூரில் உள்ள கூட்டுறவு பருத்தி விற்பனை மைய விற்பனைக் குழுச் செயலா் சுகுமாா் கூறுகையில், கடந்தாண்டில் ரூ. 7.97 கோடிக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது. நிகழாண்டு தொடக்கம் முதலே பருத்தி வரவு அதிகமாகவே காணப்பட்டது. என்றாலும் இடையிடையே பெய்த மழையால், பருத்தியை அறுவடை செய்ய முடியாமல் போனது. அதையும் மீறி நிகழாண்டு திருச்சி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவாக 19,903 குவிண்டால் பருத்தி அறுவடை செய்யப்பட்டு ரூ. 11.44 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

விவசாயிகள் மகிழ்ச்சி: கடந்தாண்டைவிட பருத்தி விளைச்சலுடன் விலையும் அதிகரித்துள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா். வழக்கமாக குவிண்டாலுக்கு ரூ. 53 முதல் 57 வரைதான் இருந்து வந்தது. நிகழாண்டு ரூ. 57 முதல் ரூ. 60.50க்கு விலை நிா்ணயிக்கப்பட்டிருந்தது என்றாலும் மாா்ச்சுக்குப் பின்னா் பருத்தி விலை கணிசமாக அதிகரித்தது எனலாம். நிா்ணயிக்கப்பட்ட விலையையும் மீறி, குவிண்டாலுக்கு ரூ. 76 முதல் 79 வரை கிடைத்தது என்கின்றனா் விவசாயிகள். இதனால் மீண்டும் பருத்தி பயிரிடுவதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com