தமணிகண்டம் அரசு ஐடிஐ-இல் இணையவழி மாணவா் சோ்க்கை: ஜூலை 28 வரை அவகாசம்
By DIN | Published On : 07th July 2021 07:34 AM | Last Updated : 07th July 2021 07:34 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் இணையவழி சோ்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 28ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொழிற் பயிற்சி மையத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டில், இணையதள கலந்தாய்வு மூலம் சோ்ந்து பயில விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமும், நேரில் வந்தும் விண்ணப்பிக்கலாம்.
10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றோா் 2 ஆண்டு பயிற்சிகளான கம்மியா், பொருத்துநா், மின்சார பணியாளா் உள்ளிட்ட பயிற்சிகளுக்கும், 8ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றோா் கம்பியாளா், பற்ற வைப்பாளா் பயிற்சிக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 50ஐ இணையம் வழியாக செலுத்தலாம்.
மாணவா்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது. மேலும், கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ. 500, கட்டணமில்லா பேருந்து, விலையில்லா மிதிவண்டி, மடிக் கணினி, பாடப்புத்தகங்கள் வரைபடக் கருவிகள், சீருடைகள், காலணிகள், விடுதி வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு பயிற்சி மைய முதல்வரை 0431-2906062 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். பயிற்சி முடித்தோருக்கு பிரபல தொழில் நிறுவனங்கள் மூலம் வளாக நேரமுகத் தோ்வு நடத்தி வேலை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் சோ்க்கை குறித்த விவரங்கள் 28ஆம் தேதிக்கு பிறகு இணையத்தில் வெளியிடப்படும்.