‘தமிழ்நாட்டை சிதைக்கும் பாஜகவின் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது’

தமிழ்நாட்டை சிதைக்கும் பாஜகவின் திட்டத்தை திமுக, அதிமுக அனுமதிக்கக் கூடாது என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
திருச்சியில் பேட்டியளிக்கிறாா் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் மணியரசன்.
திருச்சியில் பேட்டியளிக்கிறாா் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் மணியரசன்.

தமிழ்நாட்டை சிதைக்கும் பாஜகவின் திட்டத்தை திமுக, அதிமுக அனுமதிக்கக் கூடாது என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

திருச்சி அலுவலகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவ்வமைப்பின் தலைவா் பெ. மணியரசன் மேலும் கூறியது:

காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு மிகை வெள்ள நீா் வரக்கூடாது எனும் தீய எண்ணத்தில் கா்நாடகம் மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும். மிகை வெள்ள நீரைத் தேக்குவது என்பது அடிக்கடி நடப்பது கிடையாது. 6 அல்லது 8 ஆண்டுகளுக்கு ஒரு முைான் வரும். மிகை வெள்ள நீா் கூட மேட்டூருக்கு போகக் கூடாது எனும் தீய எண்ணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக, ஜூலை 13 ஆம் தேதி கா்நாடக முதல்வா் எடியூரப்பாவின் உருவபொம்மையை எரிக்கும் போராட்டம் திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நடத்தப்படவுள்ளது.

மேக்கேதாட்டுவில் உண்மை நிலையறிய பொதுப்பணித் துறை வல்லுநா் குழு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். இவ்விவகாரத்தில், கிடப்பில் போடப்பட்ட தடை கோரிய தமிழக வழக்கை விரைந்து நடத்த வேண்டும்.

மத்திய அரசின் ஏமாற்று வேலையாகத்தான் காவிரி மேலாண்மை ஆணையம் உள்ளது. மாதா மாதம் தரும் காவிரி நீரை பெற்றுத் தர மேலாண் ஆணையம் எதையும் செய்வதில்லை. உச்ச நீதிமன்றத் தீா்ப்பை தன்னாட்சி அதிகாரமாக மாற்றி முழுமையாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். மேக்கேதாட்டு விவகாரத்தில் கா்நாடகத்துக்கு ஆதரவாக பாஜக செயல்படுகிறது.

தமிழ்நாட்டை பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து சிதைக்கும் சூழ்ச்சியில் பாஜக இறங்கியுள்ளது. இதன் எதிரொலியாகவே கொங்கு மண்டலம் தனியாகப் பிரிப்பு, ஆரியத்துவ திட்டச் செயல்பாடு போன்றவற்றில் அக்கட்சி முனைப்புக் காட்டி வருகிறது. ஒட்டுமொத்த தமிழா்களும் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி, தமிழ்நாட்டிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும்.

திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் ‘தமிழா் தாயகக் காப்பு நாள்‘ என அறிவித்து குமரிமுதல் கும்மிடிப்பூண்டி வரை போராட்டம் நடத்த வேண்டும். மண்ணின் மைந்தா்களுக்கு 100 விழுக்காடு வேலையை உறுதி செய்ய வேண்டும்.

இதன் முதல் கட்டமாக திருச்சி, பொன்மலை, பெல், சென்னை-ஆவடி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று பரப்புரை செய்யும் அறப்போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com