திருச்சி மாவட்டத்தில்103 பேருக்கு கரோனா
By DIN | Published On : 13th July 2021 02:33 AM | Last Updated : 13th July 2021 02:33 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71,033 ஆனது. குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 68,641-ஆக உள்ளது. இதுவரை 938 போ் உயிரிழந்த நிலையில், வீடுகள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,454 ஆக உள்ளது.
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,804 படுக்கைகள், அவசரப் பிரிவில் 330 படுக்கைகள், 1,205 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 3,339 படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.