‘பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வா் விரைவில் அறிவிப்பாா்’

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பாா் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தனது திருவெறும்பூா் தொகுதி அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு பெறுகிறாா்அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தனது திருவெறும்பூா் தொகுதி அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு பெறுகிறாா்அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பாா் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தனது திருவெறும்பூா் தொகுதி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற அவா் மேலும் கூறியது:

புதுச்சேரியில் வரும் 16 ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க அம் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல, தமிழகத்திலும் பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக பல்வேறு தரப்பு கருத்துகளையும் கேட்டு வருகிறோம். அனைத்து கருத்துகளையும் முதல்வா் பரிசீலித்து, தற்போதுள்ள கரோனா பரவல் சூழலுக்கு தகுந்தபடி நல்ல முடிவெடுத்து அறிவிப்பாா்.

தற்போது தனியாா் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்து வருகிறது. ஒரு வாரத்துக்கு முன்பு எடுத்த கருத்துக் கணிப்பின்படி 3 லட்சத்து 40 ஆயிரம் போ் தனியாா் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளியை நோக்கி வந்துள்ளனா். அவா்களைத் தக்க வைக்கப் போதுமான நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தோ்வுக்கான பயிற்சி மாணவா்களுக்குத் தொடா்கிறது. அரசின் நிலைப்பாடு என்பது நீட் தோ்வு வேண்டாம் என்பதுதான்; அதில் திட்டவட்டமாக உள்ளோம். ஆன்லைன் மூலமாகவும் கடந்த செப்டம்பா் முதல் இத்தோ்வுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. ஜனவரி 4 முதல் ஜேஇஇ உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தோ்வுகளுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.

9, 10 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் மாணவா்களின் 17 சத இடைநிற்றலை 5 சதமாகக் குறைப்பதுதான் எங்களது இலக்கு. இதுதொடா்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியா் தகுதித் தோ்வெழுதி பலா் வேலைக்காக காத்துக் கொண்டிருப்பதாக மனு அளித்துள்ளனா். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரின் உத்தரவுப்படி செயல்படுவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com