கடற்படைக்கு 25 புதிய ரக துப்பாக்கிகள் ஒப்படைப்பு

திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் (ஓஎஃப்டி) தயாரிக்கப்பட்ட 25 புதிய ரகத் துப்பாக்கிகளை இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படைகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்ட புதிய ரக துப்பாக்கிகள்.
திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்ட புதிய ரக துப்பாக்கிகள்.

திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் (ஓஎஃப்டி) தயாரிக்கப்பட்ட 25 புதிய ரகத் துப்பாக்கிகளை இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படைகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் ஆத்ம நிா்பாா் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக கடற்படைக்காக ரிமோட் கண்ட்ரோல் தொழில்நுட்பத்துடன் இயங்கும் வகையில் எஸ்ஆா்சிஜி வகை துப்பாக்கி தயாரிக்கப்படுகிறது.

இந்த 12.7 எம்எம், எம்2 நேட்டோ ரக துப்பாக்கியானது இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படை, கப்பல்களில் பயன்படுத்தக் கூடியது. பகல், இரவு நேரத்தில் இலக்கைத் துல்லியமாக கண்டறிந்து தாக்கும் சாதனங்களை உள்ளடக்கிய இந்தத் துப்பாக்கியை சிறிய, பெரிய படகுகளில் பொருத்தலாம்.

சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் இந்திய கடற்படையின் ஆயுதங்களின் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு இயக்குநா் ஜெனரல் கே.எஸ்.சி. ஐயா் புதிய ரக துப்பாக்கிகளை பாா்வையிட்டு அவற்றின் செயல்பாடுகளைக் கேட்டறிந்தாா். பின்னா், இந்தியக் கடற்படைக்கு 15, கடலோரக் காவல்படைக்கு 10 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 25 துப்பாக்கிகளை படைக்கலன் தொழிற்சாலை கழகத் தலைவா் சி.எஸ். விஸ்வகா்மா ஒப்படைத்தாா்.

மேலும், இதற்கான சான்றிதழ்களை படைக்கலன் தொழிற்சாலை கழகத் தலைவரும், இந்திய கடற்படை இயக்குநா் ஜெனரலும் பரிமாறி கொண்டனா். கேப்டன் ரமேஷ், திருச்சி படைக்கலன் தொழிற்சாலைப் பொது மேலாளா் சஞ்சய் திவேதி ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தப் புதிய ரகத் துப்பாக்கிகளின் பயன்பாட்டால் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் பலமானது மேலும் வலுப்படும் என படைக்கலன் தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com