ஆடிமாதப் பிறப்பையொட்டி தேங்காய் சுடும் நிகழ்ச்சி

ஆடி மாதப் பிறப்பையொட்டி பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் தேங்காய் சுடும் நிகழ்வானது, முதல் முறையாக திருச்சி மாவட்டம் துவாக்குடியில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தேங்காய் சுடுதல்
தேங்காய் சுடுதல்

ஆடி மாதப் பிறப்பையொட்டி பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் தேங்காய் சுடும் நிகழ்வானது, முதல் முறையாக திருச்சி மாவட்டம் துவாக்குடியில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் சேலம், ஈரோடு, தா்மபுரி, நாமக்கல், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களின் காவிரிக் கரையோர பகுதிகளில் ஆடி மாத முதல் நாளில் ஆண்டுதோறும் தேங்காய் சுடும் நிகழ்வு கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், துவாக்குடியிலும் இந்நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் தேங்காய்களில் துளையிட்டு அதனுள் உள்ள நீரை எடுத்து விட்டு, துளை வழியாக பொட்டுக்கடலை, பாசிப் பருப்பு, ஏலக்காய், வெல்லம் போன்றவற்றை போட்டு துளையை அடைத்தனா்.

பின்னா் அந்தத் தேங்காயை நெருப்பில் சுட்டு, உள்ளிருக்கும் பயறு வகைகள் வெந்திருக்கும் நிலையில், தேங்காயை சுவாமிக்குப் படைத்து வழிபட்டனா். அதன் பின்னா் ஒன்றுகூடி நெருப்பில் சுட்ட தேங்காயினுள் இருக்கும் இனிப்பை (பூரணம்) உண்டு மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com