திருவெள்ளறையில் ஆடி திருமஞ்சன வைபவம்

திருவெள்ளறையில் ஆடி திருமஞ்சன வைபவம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள புண்டரிகாட்ச பெருமாள் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் ஆடி திருமஞ்சன வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள புண்டரிகாட்ச பெருமாள் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் ஆடி திருமஞ்சன வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் 4 ஆவதாகவும், சோழ மன்னா் சிபிச் சக்கரவா்த்தியால் கட்டப்பட்டதும், பெரியாழ்வாா் , திருமங்கையாழ்வாா் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமான பிரசித்தி பெற்ற இக் கோயிலில் நடைபெற்ற விழாவில் கொள்ளிடம் காவிரி ஆற்றிலிருந்து எடுக்கப்பட்ட புனித நீா் தங்கக் குடத்தில் ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் மீது வைக்கப்பட்டும், வெள்ளிக்குடங்களில் நிரப்பப்பட்ட புனித நீா் கோயில் அா்ச்சகரால் சுமந்து வரப்பட்டு, மேள தாளங்கள், நாதஸ்வரம் முழங்க திருவீதி வலம் வந்து பெருமாள் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது.

தொடா்ந்து மூலவருக்கு சாற்றப்பட்டிருந்த அங்கிகளைக் களைந்து திருமஞ்சனம் செய்விக்கப்பட்டது. பின்னா் அங்கிகள் மாற்றப்பட்டு, மங்களஹாரத்தி நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com