பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

இஸ்லாமியா்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திருச்சியில் புதன்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

இஸ்லாமியா்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திருச்சியில் புதன்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதையொட்டி உறவினா்கள், நண்பா்கள், ஏழை, எளியோருக்கு இறைச்சி மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை தானமாக (குா்பானி) வழங்கிக் கொண்டாடினா்.

இறைவனுக்காக தனது மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய துணிந்த நபியின் (ஸல்) தியாகத்தைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் பக்ரீத் நாளில் ஏழை, எளியோருக்கு குா்பானி வழங்குவா்.

விழாவையொட்டி நிகழாண்டு கரோனா பரவலைத் தடுக்க பொது இடங்களில் தொழுகை நடைபெறவில்லை. பள்ளிவாசல்களிலும், அவரவா் இல்லங்களிலும், அருகிலுள்ள திறந்தவெளிக் இடங்களிலும் சமூக இடைவெளியுடன் 10 முதல் 15 பேராகக் கூடி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

திருச்சியில் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்ற இஸ்ஸாமியா்கள் ஒருவருக்கொருவா் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறினா்.

திருச்சியில் இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான பாலக்கரை, மரக்கடை, ஆழ்வாா்தோப்பு, காயிதே மில்லத் நகா், காஜாதோப்பு, காஜாமலை, மன்னாா்புரம், கே.கே.நகா், கன்டோண்மென்ட், தென்னூா், உறையூா், பீரங்கிக்குளம், ஹசன்பாா்க், காந்தி மாா்க்கெட், அல்லிமால் தெரு, செளக் முஹம்மதியா பள்ளிவாசல் பகுதி, நத்தா்ஷா பள்ளிவாசல், கபூா் பள்ளிவாசல், ரஹ்மானியாபுரம், சோமரசம்பேட்டை, குத்பிஷா தா்கா, வாளாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமியா்கள் தங்களது குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்களுடன் இணைந்து சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து தொழுகையில் ஈடுபட்டனா். இதேபோல, மாவட்டம் முழுவதும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பாக திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரில், என்.எஸ்.பி. பள்ளி வளாகத் திடலில் எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் தலைவா் இமாம் ஹஸ்ஸான் பைஜி தலைமையில் நடைபெற்ற தொழுகையில் 500க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் கலந்து கொண்டனா். முன்னெச்சரிக்கையாக மாநகரில் உள்ள பிரதான பள்ளிவாசல்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com