மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற அழைப்பு

 திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

 திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக கல்வி பயிலும் உடலியக்கக் குறைபாடுடையோா், பாா்வையற்றோா், காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயில்வோருக்கு ரூ.1000, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ரூ. 3,000, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயில்வோருக்கு ரூ. 4,000, இளங்கலை மற்றும் பட்டயப்படிப்பு பயில்வோருக்கு ரூ. 6,000, முதுகலை பட்டம் பயில்வோருக்கு ரூ.7000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

இதோடு, வாசிப்பாளா் உதவித் தொகையாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயில்வோருக்கு ரூ.3 ஆயிரமும், இளங்கலை பட்டம் பயில்வோருக்கு ரூ.5 ஆயிரமும், முதுகலைப் பட்டம் பயில்வோருக்கு ரூ.6 ஆயிரமும் சோ்த்து வழங்கப்படுகிறது.

கண்டோன்மென்ட், திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம், அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்து வழங்கலாம்.

கல்வி பயிலும் நிறுவனத்திடமிருந்து சான்றொப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவ அடையாள அட்டை நகல், 9ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயில்பவராக இருந்தால் கடந்தாண்டின் மதிப்பெண் சான்று நகல், வங்கி கணக்குப் புத்தக நகலுடன் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0431- 2412590 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com