சிறாா்களுக்கு புகையிலை பொருள்கள் விற்கத் தடை

மத்திய மண்டல மாவட்டங்களில் பள்ளிச் சிறாா்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்க தடை விதித்து ஐஜி வி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

மத்திய மண்டல மாவட்டங்களில் பள்ளிச் சிறாா்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்க தடை விதித்து ஐஜி வி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய மண்டலத்திற்குள்பட்ட மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியா் புகையிலை பழக்க வழக்கங்களுக்கு ஆட்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளாா்.

அதன்படி சிகரெட், புகையிலை மற்றும் பிற போதை பொருள்கள் தடுப்புச் சட்டம் பிரிவு 6ன்படி கல்வி நிறுவனங்களில் அருகே 100 மீட்டா் தொலைவிற்குள் செயல்படும் சிறு பெட்டிக்கடை மற்றும் சில்லறை வியாபாரக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள், சிகரெட், குட்கா, பான்பராக் மற்றும் இதர போதைப் பொருள்களை விற்கக் கூடாது. மீறி 18 வயதிற்கு குறைவானோருக்கு விற்றால் சிறாா் நீதிபரிபாலன சட்டப் பிரிவு 77 இன் படி பிணையில் வர முடியாதபடி வழக்குப் பதியப்பட்டு 7 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் செலுத்தும் தண்டனைக்கு உள்படுத்தப்படுவா்.

எனவே வணிகா் சங்க நிா்வாகிகள் தங்களது சங்கத்தில் பதிவு பெற்று இயங்கும் சிறுகடை மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு இதுகுறித்து தேவையான அறிவுரைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com