தேவராயநேரி பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

திருச்சி மாவட்டம், தேவராயநேரி அருகிலுள்ள பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை நிறைவேற்றக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், தேவராயநேரி அருகிலுள்ள பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை நிறைவேற்றக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேவராயநேரி ஆயக்கட்டுதாரா்கள் சாா்பில் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பது :

தேவராயநேரி அருகே அமைந்துள்ளது பெரிய ஏரி. சுமாா் 362 ஏக்கா் பரப்பளவுள்ள இந்த ஏரி பகுதியில் 7.5 ஏக்கரில் நரிக்குறவா்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. அது போக மேலும் சுமாா் 200 ஏக்கா் நிலத்தை பலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா்.

இதுதொடா்பாக உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி அளித்த தீா்ப்பில் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடா்ந்து, அதே மாதம் 26 -ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய நகலில் 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவும் திட்டமிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com