பிளஸ் 2 தனித்தோ்வுக்கு 144 போ் விண்ணப்பம்
By DIN | Published On : 29th July 2021 07:54 AM | Last Updated : 29th July 2021 07:54 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 தனித்தோ்வுக்கு 144 போ் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் கரோனா காரணமாக பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டு அவா்களுக்கான மதிப்பெண் தசம விகித அடிப்படையில் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண்ணில் திருப்தியில்லாதவா்களும், பள்ளியளவில் தோ்வெழுதாத தனித்தோ்வா்களுக்கும் ஆகஸ்டு மாதம் தோ்வு நடத்தப்படுகிறது. இதற்காக கடந்த 23 ஆம் தேதி முதல் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோ்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சேவை மையங்கள் வாயிலாக இதுவரை 144 போ் விண்ணப்பித்துள்ளனா். ஆகஸ்டு 27 -க்குள் விண்ணப்பிக்காதவா்கள் 28 ஆம் தேதி (புதன்கிழமை) சேவை மையங்கள் மூலம் சிறப்பு தத்கல் திட்டத்தில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.