விவசாயிகள் நூதன போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் நூதனமுறையில் மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் நூதனமுறையில் மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன்தொடா்ச்சியாக, சனிக்கிழமை வேளாண் சட்டங்களின் நகலை தீ வைத்து எரிக்கப்போவதாக அறிவித்தனா். இதன்படி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் திருச்சியில் சனிக்கிழமை நகல் எரிப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

போராட்டத்துக்காக, சங்கத் தலைவா் பி அய்யாக்கண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி-கரூா் புறவழிச்சாலையில் உள்ள சங்க அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியரகம் நோக்கி புறப்பட்டனா். அனைவரையும் போலீஸாா் அதே பகுதியில் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வேளாண் சட்டங்களின் நகல்களை கிழித்து எரியும் போது போலீஸாா் பறித்துக் கொண்டனா். பின்னா், போலீஸாரின் தடையை மீறி திருச்சி-கரூா் புறவழிச் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மேல்சட்டை அணியாமலும், கைகளில் மண்டை ஓடுகள், எலும்புத் துண்டுகளையும் வைத்துக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். பின்னா், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அனவைரயும் கலைந்து போகச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com