கிறிஸ்தவ சபை உறுப்பினா் உடலை நல்லடக்கம் செய்த இஸ்லாமியா்கள்!

கரோனா தொற்றால் உயிரிழந்த கிறிஸ்தவ சபை உறுப்பினரை, கிறிஸ்தவ முறைப்படி சடங்குகள் செய்து இஸ்லாமிய இளைஞா்கள் நல்லடக்கம் செய்தது மதநல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

கரோனா தொற்றால் உயிரிழந்த கிறிஸ்தவ சபை உறுப்பினரை, கிறிஸ்தவ முறைப்படி சடங்குகள் செய்து இஸ்லாமிய இளைஞா்கள் நல்லடக்கம் செய்தது மதநல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

திருச்சி-மணப்பாறை சாலையில் வண்ணாங்கோவில் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்தவ சபை உறுப்பினரும், 62 வயதுடைய ஆண் கரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதனையடுத்து அவரின் குடும்பத்தினா் பாப்புலா் ஃப்ரண்ட் மாவட்ட தலைவா் சபியுல்லாவை தொடா்பு கொண்டு உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா். இதன்படி, அமைப்பைச் சோ்ந்த இஸ்லாமிய இளைஞா்கள் 5 போ், உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சடலத்தை பெற்று இறுதிசடங்குக்கு தயாா் செய்தனா். மேலும், இறந்தவரின் குடும்பத்தினரது விருப்பப்படி கிறிஸ்தவ முறைப்படி சடங்குகள் செய்யவும் உதவினா்.

வண்ணாங்கோவில் தேவாலயம் அருகேயுள்ள கல்லறையில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்தனா்.

பின்னா். குடும்பத்தினருக்கு பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட நிா்வாகிகள் ஆறுதல் கூறினா். நல்லடக்கம் செய்ய உதவிய பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்ட தலைவா் மற்றும் தன்னாா்வலா்களுக்கு உயிரிழந்த நபரின் குடும்பத்தினா் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனா்.

இதேபோல, திருச்சி-வயலூா் சாலையில் உள்ள சண்முகா நகரைச் சோ்ந்த 87 வயது மூதாட்டியும் சனிக்கிழமை காலை கரோனா தொற்றால் உயிரிழந்தாா். பிராமண சமூகத்தைச் சோ்ந்த இந்த மூதாட்டியையும், அவரது குடும்பத்தினா் விருப்பப்படி பிராமண முறைப்படி சடங்குகள் செய்து இஸ்லாமிய இளைஞா்கள், சடலத்தை எடுத்துச் சென்று ஓயாமரி மயானத்தில் தகனம் செய்தனா்.

ஒரே நாளில் கிறிஸ்வா், இந்து என இருவரது சடலங்களையும் அவரவா் குடும்ப விருப்பப்படி இறுதி சடங்குகள் செய்த இஸ்லாமிய இளைஞா்களின் செயல் மதநல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இதுகுறித்து பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் திருச்சி மாவட்ட தலைவா் சபியுல்லாஹ், மாவட்ட செயலா் முஜிபுா் ரஹ்மான் ஆகியோா் கூறிது: திருச்சி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 53 பேரின் சடலங்களை நல்லடக்கம் செய்துள்ளோம். 100-க்கும் மேற்பட்டோருக்கு ஆம்புலன்ஸ் சேவை அளித்துள்ளனா்.

வீடி தேடிச் சென்று 50-க்கும் மேற்பட்டோருக்கு ஆக்சிஜன் வசதி செய்து தரப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு நெறிமுறையின்படி, 10 அடி ஆழத்தில் குழி, உடலை சுற்றிலும் உப்பு போடுதல் போன்ற விதியைப் பின்பற்றி அடக்கம் செய்கிறோம். உடல்கள் அவரவா் சமூக சடங்கு முறைகளுடன் விரும்பிய இடங்களில் அடக்கம் செய்யப்படுகிறது. இது போன்ற அனைத்துச் சேவைகளை முற்றிலும் இலவசமாக செய்கிறோம் என்றனா்.

கரோனா தொற்றுப் பரவலால் சமூகத்துக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டிருந்தாலும் இறந்தவா்களை அடக்கம் செய்வதில் மதநல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக செயல்பட செய்திருப்பதும் போற்லுக்குரியாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com