உலக சுற்றுச் சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சியில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சியில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி, பொன்மலை ரயில்வே காலனியில், உலக சுற்றுச் குழல் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்க சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை வகித்து மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம் கூறியது:

உலக சுற்றுச் சூழல் தினத்தின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சுற்றுச் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணா்வை ஏற்படுத்துவதும், 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.

2021ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு என்பது, சுற்றுச்சூழல் மோசமடைவதை தடுப்பது, அம்மாதிரியான செயல்களை நிறுத்துவது மற்றும் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய பணியாற்றுவது என ஐநா தெரிவித்துள்ளது.

எனவே தான், இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக மறுமுறை யோசிப்பது. மீண்டும் உருவாக்குவது, பாதுகாப்பது என்பதை நிறுவி உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பில் பயன்படுத்தப்படும் முறைகளில் மறுகட்டமைப்பு, இரண்டாம் நிலை, உயிரியல் தாழ்வாரங்கள், இடமாற்றங்கள், அறிமுகங்கள் மற்றும் மறு அறிமுகங்கள் ஆகியவை அடங்கும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து, பொன்மலை காலனி பகுதி முழுவதும் அரசு, வேம்பு, புங்கன் என 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், மக்கள் சக்தி இயக்க நிா்வாகிகள் மகளிரணி என்.தரணி, உதயசந்திரன் , ரயில்வே ராமராஜ் , காா்த்திக், ஆா். சுமன், ஆா். சுதன், உ. ரதிஸ், மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com