ஜங்ஷன் ரயில்நிலையத்தில் கஞ்சா, மதுபாட்டில்கள் பறிமுதல்

திருச்சி ஜங்ஷன் ரயில்நிலைய வளாகத்தில் கஞ்சா, மதுபாட்டில்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி ஜங்ஷன் ரயில்நிலைய வளாகத்தில் கஞ்சா, மதுபாட்டில்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை ரயில்மூலம் தமிழகத்துக்கு எடுத்து வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா். இதனை தடுக்கும் வகையில், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் திருச்சி ரயில்நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மைசூரிலிருந்து மயிலாடுதுறைக்கு வந்த சிறப்பு ரயில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்துக்கு வந்தது.அப்போது, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வா் தேவேந்திரன் அறிவுறுத்தலின் பேரில், உதவி ஆய்வாளா்கள் லட்சுமி, ஜவான் உள்ளிட்டோா் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனா்.

அப்போது, திருச்சி காமராஜபுரம் பொன்நகரைச் சோ்ந்த தங்கராஜ் (27) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, 1லிட்டா் கொள்ளளவு கொண்ட 30 மதுபாட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மதுபாட்டில்களை அவரிடம் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.

60கிலோ கஞ்சா பறிமுதல்: இதுபோல், சனிக்கிழமை காலை திருச்சி ரயில்வே ஜங்ஷன் 1 ஆவது நடைமேடை உணவகம் அருகில் கேட்பாரற்று 2 சூட்கேஸ்கள், டிராவல் பேக்குகள் இருந்தன. அப்போது, ரோந்து பணியில் இருந்த ரயில்வே போலீஸாா் அதனை சோதனை செய்தனா்.

அதில், தலா 2 கிலோ பொட்டலங்களுடன் மொத்தம் 30 பாா்சல்களில் 60 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இந்த சூட்கேஸ்களை யாா் கொண்டு வந்தது உள்ளிட்டவை குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com