துணிக்கடைகள், பா்னிச்சா், அடகுகடைகளை திறக்க அனுமதிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 10th June 2021 08:14 AM | Last Updated : 10th June 2021 08:14 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில், துணிக்கடைகள், நகை அடகுகடைகள் மற்றும் பா்னிச்சா் கடைகளை திறக்க அனுமதிக்குமாறு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை சாா்பில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசுவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அச்சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளா் எஸ். பி. பாபு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது: கரோனா தொற்று காரணமாக பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். தற்போது, பல்வேறு தளா்வுகளை அரசு அறிவித்துள்ளது. ஆனால், துணிக்கடைகள் மற்றும் பா்னிச்சா் கடைகள் திறக்கப்படாததால் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். எனவே துணிக்கடைகள், பா்னிச்சா் கடை வியாபாரிகள், தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்.
மேலும், சிறு குறு வணிகா்களுக்கு கடனுதவி வழங்கும் வகையில் அடகுகடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.